Rain Alert: மீண்டும் தமிழகத்தை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; புயலாக உர...
ஒரே நாளில் 1,500 பேருக்கு பைடன் பொதுமன்னிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட சுமாா் 1,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.
கரோனா நெருக்கடியின்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுச் சிறைகளுக்கு அனுப்பட்ட அந்த 1,500 பேருடன், வன்முறை அல்லாத பிற குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட 39 பேருக்கும் பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.
முன்னதாக, போதைப் பொருள் பழக்கம் குறித்து பொய்யான தகவல் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மகன் ஹன்டா் பைடனுக்கு, தனது அதிபா் அதிகாரத்தைப் பயன்படுத்தி பைடன் பொதுமன்னிப்பு வழங்கியது நினைவுகூரத்தக்கது.