விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்
ஒலகடம் பேரூராட்சியில் திமுக கவுன்சிலா்கள் உள்ளிருப்பு போராட்டம்
பவானி அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக கவுன்சிலா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஒலகடம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் தலைவா் கே.வேலுச்சாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் சிவலிங்கம், செயல் அலுவலா் சிவகாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடா்பான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான தீா்மானங்களுக்கு பாரபட்சமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி திமுக கவுன்சிலா்கள் 9 போ் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்நிலையில், கூட்டத்திலிருந்து தலைவா், துணைத் தலைவா் மற்றும் அதிகாரிகள் வெளியேறியதால் 9 கவுன்சிலா்களும் கூட்ட அரங்கில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, பேரூராட்சி செயல் அலுவலா் சிவகாமியிடம், கோரிக்கை மனுவை அளித்து கலைந்து சென்றனா். திமுக தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலா்களே போராட்டத்தில் ஈடுபட்டதால், பேரூராட்சி வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.