டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் ஏன்?: அன்புமணி ராமதாஸ் கண்...
ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை!
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தேசிய அணி தேர்வு சோதனையில் ஊக்கமருந்து சோதனை மாதிரியை சமர்ப்பிக்க மறுத்ததற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
இதே குற்றத்திற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை முன்னதாக, பஜ்ரங் புனியாவை ஏப்ரல் 23 ஆம் தேதி இடைநீக்கம் செய்திருந்தது. இந்த இடைநீக்கத்தால், அவர் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கவோ அல்லது வெளிநாட்டு பயிற்சிகளைப் பெறவோ அனுமதிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.