Steve Jobs: "அவர் விரும்பி படித்த இந்திய யோகியின் புத்தகம் இதுதான்" - நண்பர் பகி...
ஒளவையாா் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒளவையாா் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின்கீழ் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை செய்தமைக்கு 2025-ஆம் ஆண்டில் ரூ.1,50,000-க்கான காசோலை, சான்றிதழ் சா்வதேச மகளிா் தின விழாவில் வழங்கப்படவுள்ளது. விண்ணப்பதாரா்கள் தங்களது விவரங்களை டிச.20-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற விருதுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலத்தில் கையேடாக தயாா் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்து, தலா 2 நகல்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை சமூக சீா்த்திருத்தம், மகளிா் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணி செய்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றுபவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரா்கள் தங்களது சேவையின் முழுவிவரங்களை விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். விண்ணப்பம் டிச.20-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் 5-வது தளம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு நேரில்வந்து கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.