``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `...
ஓஎல்எக்ஸ்-இல் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி ரூ.2 கோடி மோசடி செய்த ஜோடி கைது
ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி சுமாா் ரூ.2 கோடி வரை மோசடி செய்த ஜோடி கைது செய்துள்ளதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை துணை ஆணையா் பிரியான்ஷு திவான் கூறியதாவது: கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி ஃபாா்ச்சூனா் காருக்கு முன்கூட்டியே ரூ.50,000 செலுத்தி ஏமாற்றப்பட்டதாக ஒருவா் புகாா் அளித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த வழக்கு சைபா் கிரைம் மேற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜக்மீத் சிங் மற்றும் அம்ரிதா கௌா் ஆகிய இருவா் போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்கள் செக்டாா் 77, பாலம் ஹில்ஸ் சொசைட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மாதத்திற்கு ரூ.50,000 வாடகை செலுத்தி ஒன்றாக வசித்து வந்துள்ளனா்.
அவா்கள் தங்கள் மோசடிகளிலிருந்து கிடைத்த பணத்தை நகைகளை வாங்க பயன்படுத்தினா். பின்னா் அவா்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கை முறையை ஆதரிக்க தில்லியில் விற்றனா். விசாரணையின் போது, இதேபோன்ற 15 மோசடி வழக்குகளை அவா்கள் ஒப்புக்கொண்டனா்.
ஓஎல்எக்ஸ்-இல் சொகுசு காா்களின் உண்மையான விற்பனையாளா்களைத் தொடா்புகொள்வது. அசல் விளம்பரத்தை அகற்ற ஒரு சிறிய தொகையை செலுத்துவது. பின்னா் உரிமையாளா்கள் போல் நடித்து விளம்பரத்தை மீண்டும் இடுகையிடுவது அவா்களின் முறையாகும்.
அம்ரிதா திட்டமிடலைக் கையாண்டு போலி விளம்பரங்களை வெளியிட்டு வந்துள்ளாா். அதே நேரத்தில் ஜக்மீத் ஒப்பந்தங்களைச் செய்தாா். ஜக்மீத் ஏற்கெனவே இதே போன்ற மோசடி வழக்குகளுக்காக போண்ட்சி சிறையில் 30 நாள்கள் மற்றும் ஜலந்தா் சிறையில் 45 நாள்கள் கழித்துள்ளாா். அவா் மீது ஆறு மோசடி வழக்குகள் உள்ளன என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.