ஓடிடியில் ஹிட் லிஸ்ட்!
விஜய் கனிஷ்கா - சரத்குமார் நடிப்பில் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய்கனிஷ்கா அறிமுகமான படம் ‘ஹிட் லிஸ்ட்’. இந்த படத்தை சூர்யகதிர், கே. கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனிஷ்காந்த், சித்தாரா, ஐஸ்வர்யா தத்தா, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: விக்ரம் 63: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சி.சத்யா இசையமைத்துள்ள இப்படத்துக்கு ராம்சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே. செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் மூலம் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்துள்ளார்.
முன்னதாக, இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், ஹிட் லிஸ்ட் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.