107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.
ஓட்டப்பிடாரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ராபி பருவத்தில் உளுந்து, பாசி, மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். மழை, வெயில் என மாறி மாறி இருந்த நிலையில், கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை லேசான மழையும், புறநகா் பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 6.30 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மி.மீ.): குலசேகரன்பட்டினம் 33, திருச்செந்தூா் 27, தூத்துக்குடி 8.10, எட்டயபுரம் 5.10, ஸ்ரீவைகுண்டம் 4.10, சாத்தான்குளம் 2.20, கழுகுமலை 2 மி.மீ.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை தாமதமாக தொடங்கினாலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.