சதம் விளாசிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா; இலங்கைக்கு 516 ரன்கள் இலக்கு!
ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்
புது தில்லி: ஓ. பன்னீர்செல்வம் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
2001 - 2006ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின்போது ஓ. பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக, திமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், 2009ஆம் ஆண்டு இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
ஆனால், 2012ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த போது, ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மனுவை ஏற்று வழக்கிலிருந்து அனைவரையும் விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையும் படிக்க.. குஜராத்திலிருந்து.. ஆந்திரம் வரை.. சீரியல் கில்லரை பிடித்தது எப்படி? சிசிடிவி மட்டுமல்ல
ஆனால், இந்த வழக்கை மீண்டும் மறுஆய்வுக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிவங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்கவும், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை மாற்றியும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், மறு விசாரணைக்கு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். சிறப்பு நீதிமன்றத்தின் அதிகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டு மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் தமிழக அரசும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.