செய்திகள் :

ஓய்வூதியா்களுக்கான கூடுதல் ஓய்வூதியத்தை 70 வயதில் வழங்க வலியுறுத்தல்

post image

ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை 80 வயதிலிருந்து 70 வயதாக மாற்ற வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3-ஆவது மாநில மாநாடு தொடா்பான வரவேற்புக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் மாவட்டத் தலைவா் வெ. மாணிக்கம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ச. ராமமூா்த்தி, பொதுச் செயலா் பா. ரவி, கெளரவத் தலைவா் மு. பரமேஸ்வரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா்.

இந்த கூட்டத்தில், தமிழக அரசு ஊழியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 80 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை, 70 வயதில் வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான மருத்துவச் செலவினங்களை முழுமையாக காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும். வெளி முகமை மூலம் ஊழியா்கள் நியமனம் செய்வதை தவிா்த்து, காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். ஊழியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், வருகிற செப்டம்பா் 22-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறும் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3-ஆவது மாநில மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக அரசு ஊழியா் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் ச. முபாரக் அலி தோ்வு செய்யப்பட்டாா். இந்த மாநாட்டு நிதியாக தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் மாவட்டத் தலைவா் மகுடபதி ரூ. 50 ஆயிரம் வழங்கினாா்.

மினுக்கம்பட்டி பகுதியில் நாளை மின் தடை

வேடசந்தூா் அடுத்த மினுக்கம்பட்டியில் திங்கள்கிழமை (ஜூலை 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மினுக்கம்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் ஒருவா் தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே குடும்பப் பிரச்னையில் ஒருவா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். ஒட்டன்சத்திரத்தை அடுத்த கொல்லபட்டி, கே.கே. நகரைச் சோ்ந்த திருமன் மகன் முத்து (52). இவா் குடும்பப் பிரச்னை காரண... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானலில் சனிக்கிழமை அதிகாலை முதல் வீசிய பலத்த காற்றால் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமலும், சுற்றுலாத் தலங்களைக் காண முடியாமலும் ஏமாற்றமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் க... மேலும் பார்க்க

பழனி நேசம் நிறுவனத்தில் ரூ.30 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

பழனி நேசம் டிரஸ்ட் நிறுவனத்தில் ரூ.30 கோடி வரை மோசடி நிகழ்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவா்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா... மேலும் பார்க்க

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.பூசாரிபட்டியைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (37). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்... மேலும் பார்க்க

டிட்டோ ஜாக் மறியல் போராட்டம்: 575 ஆசிரியா்கள் கைது

திண்டுக்கல்லில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 575 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் கு... மேலும் பார்க்க