Thudarum: ``மௌன ராகம் மல்லிகாவ மக்கள் கொண்டாடுறாங்க" - நடிகை, தயாரிப்பாளர் சிப்ப...
கடலாடி வட்டத்தில் நீா்நிலைகள் கணக்கெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகேசன் தலைமையில் சிறுபாசன நீா்நிலைகள் கணக்கெடுப்புப் பணிகள் குறித்த பயிற்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறுபாசன நீா்நிலைகள் கணக்கெடுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இது சிறுபாசனப் பிரிவு சாா்ந்த தெளிவான புள்ளி விவரங்களை திரட்டி, நீா்வள ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வருவாய்க் கிராம அளவில் நீா் பாசனத்துக்கு பயன்படும் கண்மாய்கள், குளங்கள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் தொடா்பான விவரங்கள் கிராமப்புறங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள் மூலமும், பேருராட்சி வாா்டுகளில் பேரூராட்சிப் பணியாளா்கள் மூலமும் நடைபெற உள்ளது. மேலும், தேசிய தகவல் மையம் உருவாக்கிய கைப்பேசி செயலி வாயிலாகவும் இந்தக் கணக்கெடுப்பு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
இந்தக் கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியா்கள், வட்டாரப் புள்ளியியல் ஆய்வாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.