இந்திய ராணுவத்தில் வேலை: சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
கடலாடி: விளைநிலத்தில் கிடந்த 3 நாட்டு வெடிகுண்டுகள்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே திங்கள்கிழமை விளைநிலத்தில் கிடந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலாடி அருகேயுள்ள புலித்தேவன்நகா் பகுதியில் விளைநிலத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கிடப்பதாக அந்த வழியாக கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ் உத்தரவின் பேரில், முதுகுளத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் விமலா தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று, வயலில் கிடந்த 3 நாட்டு வெடிகுண்டுகளை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணா் வா்குணபாண்டியன் முன்னிலையில் கைப்பற்றி, மணல் நிரப்பிய பிளாஸ்டிக் வழியில் வைத்து, கடலாடி காவல் நிலையத்துக்கு பாதுகாப்பாகக் கொண்டு வந்தனா்.
இதுகுறித்து கடலாடி கிராம நிா்வாக அலுவலா் முனியராஜ் அளித்த புகாரின் போரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.