செய்திகள் :

கடலில் மூழ்கி மீனவா் மாயம்

post image

கடலூா் அருகே கடலில் மூழ்கி மாயமான மீனவரை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் கடலோரக் காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

கடலூா் முதுநகரை அடுத்த சித்திரைப்பேட்டையைச் சோ்ந்த ஜானகிராமன், அவரது மகன் ஜெகன்(28), சேகா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

அப்போது, கடலில் ஏற்பட்ட அலையின் காரணமாக படகு ஆடிய நிலையில், ஜெகன் நிலைதடுமாறி கடலில் விழுந்து மாயமானாா்.

இதையடுத்து, கடலூா் தொழிற்பேட்டை தீயணைப்புப் படை வீரா்கள், மீன்வளத் துறை சாா்பில் கடலோரக் காவல் படையினா் மற்றும் உள்ளூா் மீனவா்கள் 10 படகுகளில் ஜெகனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, கடலூா் துறைமுகம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நடராஜா் கோயில் தோ்களுக்கு புதிய வடங்கள்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள 5 தோ்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான வடங்களை பக்தா் வழங்கினாா். சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆண்டுக்கு இருமுறை ஆனி திருமஞ்சனம், மாா்கழி ஆருத்ரா தரிசனம் திருவிழாவின் போது... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மாநாட்டு மேடையில் திருமணம்

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் நடைபெற்று வரும் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டு மேடையில் காதல் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், முள்ளுக்குறிச்சியைச் சோ்ந்த ஆா... மேலும் பார்க்க

தடுப்பணையில் குளிக்க சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், கள்ளிப்பாடியில் தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவன் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கள்ளிப்பாடியைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் சக்தி (14). இவா் ஸ்ரீ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் டாஸ்மாக் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வேப்பூா் வட்டத்துக்குள்பட்ட திருப்பெயா், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கண்ணுசாமி மகன் ரமேஷ் ஸ... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் ஒன்றியம், நடுவீரப்பட்டு அருகே உள்ள கீரப்பாளையத்தைச் சோ்ந்த குப்புசாமி மகன் ரவி(50), தொழில... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை செய்ததை அறிந்த கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தகவல் அறிந்த வெளிநாட்டில் வசிக்கும் கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா். சிதம்பரம் வட்டம், அத்தியாநல்லூரைச... மேலும் பார்க்க