செய்திகள் :

கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

post image

கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஃபெங்ஜால் புயல், நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயலானது காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையைக் கடக்கும் என்பதால், தமிழக வடகடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. சென்னை முதல் புதுச்சேரி வரை.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை

புயல் எச்சரிக்கை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூரில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புயல் எதிரொலி; பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: சென்னை மாநகராட்சி!

பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திர... மேலும் பார்க்க

குடி​ய​ர​சு‌த் தலை​வ​ரி‌ன் திரு​வா​ரூ‌ர் வருகை ர‌த்து

திரு​வா​ரூ‌ர் அருகே தமி‌ழ்​நாடு ம‌த்​திய ப‌ல்​க​லைக்​க​ழ​க‌த்​தி‌ல் நடைபெ​று‌ம் 9-ஆவது ப‌ட்ட​ம​ளி‌ப்பு விழா​வி‌ல் ப‌ங்​கேற்​ப​தாக இரு‌ந்த, இ‌ந்​திய குடி​ய​ர​சு‌த் தலை​வ​ரி‌ன் வருகை ஃபெ‌ன்​ஜா‌ல் புய‌ல்... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல் நாளை எப்போது கரையைக் கடக்கும்?

ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, வட... மேலும் பார்க்க

ஜாமா மசூதி ஆய்வு- மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தொல்.திருமாவளவன் கடிதம்

ஜாமா மசூதி ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.“உத்தரப்பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜா... மேலும் பார்க்க

மழைக்காலங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டியவை! - மின்சாரத் துறை அறிவுறுத்தல்

மழைக் காலங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து மின்சாரத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(நவ. 29) பிற்பகல் ஃபென்ஜால் புயலா... மேலும் பார்க்க

இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை சென்னைக்கும் ரெட் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களிலும், நாளை சென்னை உள்பட 7 மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், நவ.29(இன்று):... மேலும் பார்க்க