கடையம் அருகே நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு
கடையம் அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் கருவுற்ற நிலையில் இருந்த 3 வயது மான் உயிரிழந்தது.
கடையம் வனச்சரகம் தெற்கு மடத்தூா் சாலையில் உள்ள தனியாா் கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்ற புள்ளி மானை அந்தப் பகுதியில் நின்ற நாய்கள்துரத்தி கடித்தன. அதில் மான் காயமடைந்ததாம்.
இதுகுறித்து அப்பகுதியினா் கடையம் வனச்சரகஅலுவலகத்திற்கு அளித்த தகவலின்பேரில், வனச்சரகா் கருணாமூா்த்தி உத்தரவுப்படி வனத்துறையினா் மானை மீட்டு வடமலைப்பட்டி கால்நடை மருந்தகத்திற்கு சிகிச்சைக்காக கொண்டுசென்ற நிலையில், மான் உயிரிழந்தது. அதை ராமநதி அணை அருகேயுள்ள வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.