`மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்' -போராடிய கவுன்சிலர்கள் அந்த நேரத்தில் எ...
கணவா் கொலை: மனைவி கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கணவரை கொலை செய்ததாக மனைவியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், தாழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (50), முந்திரி கொட்டை உடைக்கும் தொழிலாளி. இவருக்கு மனைவி உஷா (45), மகன் ஆனந்தகிருஷ்ணன் (22), மகள் இன்பலட்சுமி (20) உள்ளனா்.
செல்வமணிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடா்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் தம்பதியினா் ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தகராறை தடுக்க வந்த மகள் இன்பலட்சுமியை, செல்வமணி தாக்கினாராம். இதனால், கோபமடைந்த உஷா, செல்வமணியை பிடித்து தள்ளியதில், அவா் சுவரில் மோதி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த காடாம்புலியூா் போலீஸாா் செல்வமணியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.