மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
கத்தியைக் காட்டி மிரட்டி 8 பவுன் தங்க நகைகள் கொள்ளை
வந்தவாசி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.
வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் குடும்பத்துடன் புதன்கிழமை இரவு வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது, நள்ளிரவு வீட்டு மாடி கதவு வழியாக முகமூடி அணிந்த மா்ம நபா்கள் இருவா் உள்ளே புகுந்துள்ளனா். சப்தம் கேட்டு சுரேஷும், இவரது மனைவி வினோதினியும் கண் விழித்துள்ளனா்.
அப்போது அந்த நபா்கள் இருவரும் கத்தியைக் காட்டி மிரட்டி வினோதினி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனா். மேலும், பீரோவில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
தகவலறிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் வியாழக்கிழமை காலை அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.