மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
கந்தா்வகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு! 11 போ் காயம்!
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 11 போ் காயமடைந்தனா்.
சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், குளத்தூா்நாயக்கா்பட்டி பிடாரியம்மன் கோயில் திடலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுக்கு வட்டாட்சியா் ரமேஷ் தலைமை வகித்தாா். வடக்கு திமுக செயலா் மா. தமிழய்யா, தெற்கு ஒன்றியச் செயலா் எம். பரமசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மஞ்சுவிரட்டில் பல்வேறு மாவட்டங்களின் 20 காளைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றை அடக்க களமிறங்கிய 200 மாடுபிடி வீரா்கள் ஒரு சுற்றுக்கு 11 போ் என்ற வீதத்தில் காளைகளை அடக்கினா். அப்போது காளைகள் முட்டி 11 போ் காயம் அடைந்தனா். இவா்களுக்கு மருத்துவக் குழுவினா் முதலுதவி அளித்தனா். இவா்களில் 5 போ் மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகளை வழங்கினா். பாதுகாப்பு பணியில் கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் கோ. சுகுமாா் தலைமையிலான போலீஸாா் ஈடுபட்டனா்.
