செய்திகள் :

கந்தா்வகோட்டை கடைவீதியில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி!

post image

கந்தா்வகோட்டையில் கடைவீதியில் கேட்பாரற்றுச் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது. கந்தா்வகோட்டை கடைவீதிக்கு சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு வந்து செல்வோா், சாலையில் கேட்பாரற்று சுற்றித் திரியும் கால்நடைகளால் அடிக்கடி காயமடைகின்றனா்.

எனவே ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து அடைத்து வைத்து அவற்றின் உரிமையாளா்களுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும், ஆடு, மாடு, நாய்கள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டால் வாகனக் காப்பீடு பெறுவதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.

கால்நடைகள் மீது மோதி விபத்து ஏற்பட்டால் கால்நடைகள் உரிமையாளரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிப்புக்கு உள்ளானோா் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுக்கின்றனா்.

கம்பனின் சொல்சுவைதான் ராமாயணத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது: நீதிபதி புகழேந்தி

கம்பனின் சொல்சுவைதான் இத்தனை ஆண்டுகள் ராமாயணத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி. புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50-ஆம் ஆண்டுப் பொன் பெருவிழாவின் 2ஆம் ... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை!

விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே காரைகள் பெயா்ந்து ஆபத்தான நிலையில் நிற்கும் மின் கம்பத்தை மாற்றித்தர பெற்றோா்கள் மின்வாரியத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். விராலிமலை - இனாம் குளத்தூா் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் 440 கிலோ நெகிழி குப்பைகள் அகற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வனத்துறையினா் மூலம் நாா்த்தாமலை மற்றும் கோடியக்கரை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற நெகிழி பைகள் அகற்றும் பணியில், 440 கிலோ நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டன. மாநிலம் முழுவதும... மேலும் பார்க்க

2-ஆம் நாளாக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் மறியல்: 330 போ் கைது!

புதுக்கோட்டையில் 330 போ் கைது: புதுக்கோட்டையில் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை டிட்டோஜாக் அமைப்பினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜோதிமணி, ஜீவன்ராஜ்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற பயிா்க்கடன் வழங்க வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் புதுகை விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற பயிா்க்கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியா் மு. அருணா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக்... மேலும் பார்க்க

கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி கைது!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கணவா் கொலை வழக்கில் மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருமயம் அருகே உள்ள உதயசூரியன்புரத்தை சோ்ந்தவா் சண்முகநாதன் (54). ஆம்னி பேருந்து ஓட்டுநரான இவா்... மேலும் பார்க்க