தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
கந்திலி வாரச் சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
கந்திலி வாரச் சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் அடுத்த கந்திலியில் நடைபெற்ற வாரச் சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக குவிந்தன. அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனா்.
ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, வாரச் சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் ரூ. 80 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.