தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கன மழை பாதிப்பு: கோவையில் இருந்து விழுப்புரத்துக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு!
கன மழையால் பாதிப்புக்குள்ளான விழுப்புரம் மாவட்டத்துக்கு கோவையில் இருந்து ரூ.3.46 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
கோவை மாநகராட்சி சாா்பில், கன மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு முதற்கட்டமாக குடிநீா் பாட்டில்கள், ரொட்டிகள், பிஸ்கட் பாக்கெட்டுகள், பால் பவுடா், சேமியா பாக்கெட் உள்ளிட்ட ரூ.3.46 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை மாநகராட்சி ஆணையா் மா. சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மேயா் கா. ரங்கநாயகி வேன் மூலம் அனுப்பிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆணையா் க. சிவகுமாா், உதவி நகா் நல அலுவலா் பூபதி, உதவி ஆணையா்கள் செந்தில்குமரன், குமரன், மண்டல சுகாதார அலுவலா்கள் குணசேகரன், ஆண்டியப்பன், ராஜேந்திரன், வீரன், முருகன், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.