செய்திகள் :

கனமழை எதிரொலி: உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

post image

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீலகிரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதகையில் உள்ள அவலாஞ்சி, பைன் மரக்காடு, 8-வது மைல் டீ பார்க், மரவியல் பூங்கா ஆகிய சுற்றுலா மையங்கள் இன்று(சனிக்கிழமை) ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Forest department has announced closure of some tourist spots in ooty due to heavy rain warning for Nilgiris.

சென்னையில் பரவலாக மழை!

சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகலில் பரவலாக மழை பெய்து வருகிறது. கே.கே. நகர், வடபழனி விருகம்பாக்கம், ராயபுரம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக ... மேலும் பார்க்க

மோதல் வழக்கு: சீமான் உள்ளிட்ட 19 பேர் விடுதலை!

மதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் சீமான் உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீனவர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு: இபிஎஸ்

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நில... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆரம்பாக்கத்தில் அதிமுகவினர் மறியல் ஆர்ப்பாட்டம்!

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை 8 நாளாகியும் கைது செய்ய தவறியதாகக் கூறி தமிழக அரசையும் காவல்து... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று(ஜ... மேலும் பார்க்க

வரதட்சிணை கேட்டு மனைவியைத் தாக்கிய காவலர் கைது!

வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் மதுரையைச் சேர்ந்த காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலைய காவலா் பூபாலன் (38). இவரது மனைவி தங்கப்பிரியா (32). இ... மேலும் பார்க்க