கனமழையால் ஸ்தம்பித்த சென்னை! நெரிசலில் சிக்கிய வாகனங்கள்!
சென்னையில் பெய்த கனமழையால் போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் வாகனங்கள் சிக்கியது.
வங்கக்கடலில் உருவாக்கியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை புறநகர்ப் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் கோயம்பேடு, போரூர் மேம்பாலம் , நான்கு ரோடு சந்திப்பு முழுவதிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, ஐயப்பன்தாங்கலில் இருந்து ராமாபுரம் செல்லக்கூடிய சாலை, போரூர் மேம்பாலம் மீதும், போரூரில் இருந்து வளசரவாக்கம், வடபழனி, கோயம்பேடு ஆகிய செல்லக்கூடிய ஆற்காடு சாலையிலும், போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லக்கூடிய சாலை என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து கடுமையாக முடங்கியது.
மெட்ரோ இரண்டாம் கட்ட பாலப் பணிகளாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அப்பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைத்து, போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.