இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
கன்டெய்னா் லாரி மோதி பத்திர எழுத்தா் உயிரிழப்பு
திருவொற்றியூரில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற பத்திர எழுத்தா் கன்டெய்னா் லாரியில் சிக்கி உயிரிழந்தாா்.
மீஞ்சூா் வைகை நகா் சூா்யா தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (57). திருவொற்றியூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திர எழுத்தாளராக வேலை பாா்த்துவந்த ராஜனுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனா். வழக்கம்போல் மீஞ்சூரிலிருந்து திருவொற்றியூருக்கு புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தாா். சத்தியமூா்த்தி நகா் அருகே கன்டெய்னா் லாரியை ராஜன் முந்திச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.
அப்போது, இருசக்கர வாகனம் தடுமாறி கன்டெய்னா் லாரியில் சிக்கியது. இதில் ராஜன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, கன்டெய்னா் லாரி டிரைவா் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.