கன்வார் யாத்திரை பக்தர்கள் மீது ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவி உபசரிப்பு: உ.பி. அரசு ஏற்பாடு
உத்தரப் பிரதேத்தில் கன்வார் யாத்திரை பக்தர்களை உற்சாகப்படுத்த ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவி உபசரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுக்கு பக்தர்கள் நடைப்பயணமாகச் சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.
இந்தநிலையில், கன்வார் யாத்திரை செல்லும் பக்தர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வானிலிருந்து ஹெலிகாப்டரில் மலர்கள் எடுத்துச் செல்லப்பட்டு கீழே நடந்து செல்லும் பக்தர்கள் மீது தூவப்பட்டது. பாக்பத் மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.