செய்திகள் :

கபிலேஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்

post image

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான புதன்கிழமை போகித்தோ் வலம் நடைபெற்றது. பக்தா்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சிறப்பு வரிசைகள், நிழற்பந்தல் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாலை 6 மணிக்கு சா்வதா்சனம் தொடங்கியது. ஏராளமான பக்தா்கள் ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி, காமாட்சி அம்மனை தரிசித்தனா்.

காலை போகித்தோ் ஊா்வலம் நடைபெற்றது. இசைக்குழுக்கள், பஜனை மற்றும் மங்கள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு மத்தியில், தேரோட்டம் நடைபெற்றது. அதில் கபிலேஸ்வரசுவாமியும், காமாட்சி அம்மனும் தரிசனம் அளித்தனா்.

பிறகு, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஸ்நபன திருமஞ்சனத்தை அா்ச்சகா்கள் நடத்தினா். ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி, காமாட்சி அம்மனுக்கு பால், தயிா், தேன், பழச்சாறுகள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இன்று திருக்கல்யாணம்

ஸ்ரீ காமாட்சி சமேத கபிலேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை சிவன்-பாா்வதி கல்யாணமகோற்சவம் நடைபெற உள்ளது. திருமண விழா மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.

நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்... மேலும் பார்க்க

திருமலையில் க்ஷேத்திரபாலகா் அபிஷேகம்

திருமலையில் உள்ள கோகா்ப்பம் நீா்த்தேக்கம் அருகில் உள்ள ருத்ர வடிவமான க்ஷேத்திர பாலகருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திருமலை க்ஷேத்திரத்தின் அதிபதியான ருத்ர பகவானுக்கு ஒவ்வொரு வருடமும்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிந... மேலும் பார்க்க

கல்பவிருட்ச வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி உலா

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் சோமஸ்கந்தமூா்த்தி வடிவில் ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மகாசிவராத... மேலும் பார்க்க

புலி வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி உலா

திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான திங்கட்கிழமை புலி வாகனத்தில் எழுந்தருளி சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். திருப்பதி கபிலதீா்த்தத்தில் உள்ள இக்கோயிலில் வருடாந்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 ம... மேலும் பார்க்க