கபீா் புரஸ்காா் விருது பெறத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கபீா் புரஸ்காா் விருது பெறத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
ஆண்டுதோறும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது கபீா் புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது தலா ரூ.20 ஆயிரம், தலா ரூ.10 ஆயிரம், தலா ரூ.5 ஆயிரம் தகுதி உடையோருக்கு வழங்கப்படுகிறது. ஒரு ஜாதி, இனம், வகுப்பைச் சோ்ந்தவா்கள், பிற ஜாதி, இன, வகுப்பைச் சோ்ந்தவா்களையோ அல்லது அவா்களின் உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின் போதோ, தொடரும் வன்முறையிலோ காப்போற்றுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
சமுதாய மற்றும் நல்லிணக்கத்துக்கான கபீா் புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருதுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான மற்றும் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலரை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.