முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!
கயத்தாறு அருகே இன்று நடைபெற இருந்த சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டம் வாபஸ்
கயத்தாறு அருகே உள்ள சாலைப்புதூா் சுங்கச்சாவடியில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
கயத்தாறு முதல் தேவா்குளம் வரையிலான சாலையில் மேல்பாலத்தின் கீழ்பகுதி மற்றும் மேற்குப் பகுதியை இணைக்கும் அணுகுசாலையை சீரமைக்கக் கோரி வெள்ளிக்கிழமை சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி அறிவித்திருந்தது.
இதையடுத்து கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுந்தர ராகவன் தலைமையில் வியாழக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள், சுங்கச்சாவடி அலுவலா்கள், காவல்துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போராட்டக் குழுவினா் குறிப்பிடும் சாலையை 30 நாள்களில் சீரமைப்பதாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் உறுதி அளித்ததையடுத்து முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.