"ரப்பர் தொழிலார்களின் குறைகளை யாருமே கேட்கவில்லை; ஆனா..." - புதிய அதிகாரிக்கு தொ...
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து(77) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி-பத்மாவதி தம்பதியருக்கு பிறந்தவர் மு.க.முத்து. இவர் பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு. சமையல்காரன் ஆகிய பாடங்களில் நடித்துள்ளார். சமையல்காரன் பாடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், வயது மூப்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க.முத்து சனிக்கிழமை காலை 8 மணியளவில் இறந்ததாக அவரது மனைவி தெரிவித்தார்.
மு.க.முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.