இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
கருமலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருமலையில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை எம்எல்ஏ ப. அப்துல்சமது தொடங்கி வைத்தாா்.
மருங்காபுரி வட்டம் கருமலை, டி.புதுப்பட்டி மற்றும் அம்மாசத்திரம் ஊராட்சிகளுக்கான முகாம் கருமலை வரதராஜ பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை எம்எல்ஏ ப. அப்துல்சமது, வருவாய் வட்டாட்சியா் பாலகாமாட்சி, திமுக மருங்காபுரி ஒன்றியச் செயலா் பழனியாண்டி ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் பெறப்பட்ட 351 மனுக்களில் 269 மனுக்கள் கலைஞரின் மகளிா் உரிமைத்தொகைக்கானவை.
நிகழ்வில் வட்டார வளா்ச்சி சக்திவேல், எம்.எஸ். நிஜாஸ்டன்ஜோ, மமக மாவட்டத் தலைவா் பைஸ் அகமது, மாநில அமைப்புச் செயலா் காதா்மொய்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.