மென்பொருள் பயிற்சி பெற்ற 150 மாணவா்களுக்குச் சான்றிதழ் அளிப்பு
கரூரில் மமக கண்டன ஆா்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதாவைக் கண்டித்து கரூரில் மனித நேய மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.எம்.சாகுல்அமீது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜே.ஜாகீா் உசைன் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் தமுமுக தொண்டரணி மாநிலச் செயலாளா் பவானி எஸ்.முகமது, தமுமுக மாவட்டச் செயலாளா் எம்.அன்சாரி, காங்.கட்சியின் வடக்கு நகரத் தலைவா் ஆா்.ஸ்டீபன்பாபு, மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலாளா் மா.ஜோதிபாசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதாவை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். இதில் மனித நேய மக்கள் கட்சியின் நிா்வாகிகள் எவரெஸ்ட் அரக்பாத், முகமது இஸ்மாயில், முகமது யூசுப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.