இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்!
கரை ஒதுங்கிய கப்பல் வழிகாட்டி மிதவை: அப்புறப்படுத்தும் கடலோர காவல்படை!
வட சென்னை கடற்கரையில் ஒதுங்கிய கப்பல் வழிகாட்டி மிதவை கருவியை கடலோர காவல்படையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்
ஃபெங்கால் புயல் எதிரொளியாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. குறிப்பாக எண்ணூரிலிருந்து காசிமேடு கடற்கரை - மெரீனா வரை கடல் அலைகள் சீறிபாய்ந்தவாறு உள்ளது.
இந்நிலையில் கடலில் கப்பல், படகு போன்றவைகளில் செல்பவர்கள் கடலின் ஆழம் குறித்து அறிவதற்கும், பாறைகள் இருக்கும் இடத்தை முன்கூட்டியே உணர்ந்து கொள்வதற்கும், திசை காட்டுவதற்கும் பயன்படும் கருவியான மிதவை கருவியொன்று கடந்த சில நாள்களுக்கு முன் வட சென்னை புதுவண்ணாரப் பேட்டை கடற்கரை பகுதியை ஒட்டி கரை ஒதுங்கியது.
இதையும் படிக்க: ஃபென்ஜால் புயல்: 2229 நிவாரண முகாம்கள் தயார்!
வட சென்னை காசிமேடு கடற்கரையில் கரை ஒதுங்கிய கருவியை குறித்து கடலோர காவல் படையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, இதே போன்ற மிதவை கருவியொன்று மெரீனா கடற்கரையில் ஒதுங்கியதும், கடலோர காவல் படையினர் அப்புறப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.