செய்திகள் :

கர்நாடக இடைத்தேர்தல்: பசவராஜ் பொம்மை மகன் தோல்வி!

post image

கர்நாடக இடைத்தேர்தலில் ஷிக்காவ்ன் தொகுதியில் போட்டியிட்ட பசவராஜ் பொம்மை மகன் பரத் பொம்மை, அவரை எதிர்த்து போட்டியிட்ட யாசீர் அகமதுகானிடம் 13,448 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

கர்நாடகத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ராமநகரம் மாவட்டத்தின் சென்னப்பட்டணா, ஹாவேரி மாவட்டத்தின் ஷிக்காவ்ன், பெல்லாரி மாவட்டத்தின் சண்டூர் தொகுதிகளில் நவ.13ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இந்த நிலையில், சென்னப்பட்டணா, ஷிக்காவ்ன், சண்டூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: 2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்

ஷிக்காவ்ன் தொகுதியை பாஜக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பசவராஜ் பொம்மை மகன் பரத் பொம்மை தோல்வியடைந்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை, ஷிகாவ்ன் சட்டப்பேரவைத் தொகுதியின் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிணைந்தால் நாம் வெற்றிப் பெறலாம்: அகிலேஷ் யாதவ்

ஒன்றிணைந்தால் நாம் வெற்றிப் பெறலாம் என்று உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் த... மேலும் பார்க்க

இந்த வெற்றியில் எனது பங்களிப்பு மிகச்சிறியது: தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் வெற்றியில் எனது பங்களிப்பு மிகச்சிறியது என்றும், இது எங்கள் அணிக்கு கிடைத்த வெற்றி என்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தின் அடுத்த முதல்வர் யார்?

மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தல்களில் 288 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்

காங்கிரஸ் தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான சிவகுமார் 2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் சிவகுமார், இது பாரத் பொம... மேலும் பார்க்க

மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர வாக்காளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ப... மேலும் பார்க்க

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: 4 இடங்களில் பாஜக முன்னிலை!

ராஜஸ்தானில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், ராம்கர் மற்றும் சல... மேலும் பார்க்க