செய்திகள் :

கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது அறிவிப்பு!

post image

2024 ஆம் ஆண்டிற்கான 'வைக்கம் விருது' கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று விதி 110-இன்கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, 2024-ஆம் ஆண்டிற்கான “வைக்கம் விருது” கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ராகுல் கொடுத்த தேசியக் கொடியை வாங்க மறுத்த ராஜ்நாத் சிங்!

தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஶ்ரீ, சாகித்ய அகாதெமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவாவுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் முதல்வரால் கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை (12/12/2024) நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஏர் இந்தியா விமானம் தாமதம்! பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் புறப்பட தாமதம் ஆகியுள்ளது. சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை 11.55 மணிக்கு 145 பயணிகளுடன் ஏ... மேலும் பார்க்க

6 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய ஆழ... மேலும் பார்க்க

பைக் டாக்ஸிகளுக்கு நெருக்கடி! நடவடிக்கைக்கு தமிழக அரசு உத்தரவு!

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழக போக்குவரத்து ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் பைக் டாக்ஸிகள் மக்கள் ம... மேலும் பார்க்க

குடையின்றி வெளியே செல்ல வேண்டாம்: சென்னையில் இன்று கனமழை எச்சரிக்கை!

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கி... மேலும் பார்க்க

போரூர் சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு!

சென்னை போரூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வளசரவாக்கம் மண்டலம் 11-க்கு உள்பட்ட சென்னை போரூர் அர... மேலும் பார்க்க

உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நினைவுகூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்! தமிழ்க்கவியில்,... மேலும் பார்க்க