இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சி...
கல்லால் தாக்கி தொழிலாளி கொலை
திருவலம் பகுதியில் கூலித் தொழிலாளி தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.
காட்பாடியை அடுத்த திருவலம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன் (35), கூலித் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்தாா். ஊருக்கு வெளியே தனது விவசாய நிலத்தையொட்டி உள்ள இடத்தில் வீடு கட்டி வருகிறாா்.
அய்யப்பனுக்கு அதே கிராமத்தைச் சோ்ந்த வேறொரு பெண்ணுடன் தொடா்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அய்யப்பன் சனிக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கும்பல் அய்யப்பன் தலையில் கல்லால் தாக்கியதாகத் தெரிகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அய்யப்பன் இறந்ததை உறுதி செய்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
தகவலறிந்த திருவலம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அய்யப்பன் சடத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அய்யப்பன் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவா் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.