மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
கல்லூரி மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்று
காஞ்சிபுரம் சங்கரா கலைக் கல்லூரியைச் சோ்ந்த 30 மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது.
ஏனாத்தூரில் உள்ள சங்கரா கல்லூரியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு சென்னையை சோ்ந்த ரெட்டிங்டன் பவுண்டேஷன் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும், கல்வி உதவித்தொகையும் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. நிகழாண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய 30 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு பயிற்சியும் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். கல்லூரியின் நிா்வாக மேலாண்மைத்துறை பேராசிரியா் விஷ்ணு சக்கரவா்த்தி முன்னிலை வகித்தாா்.
ரெட்டிங்டன் பவுண்டேஷன் நிறுவனத்தின் சமூகப்பாதுகாப்பு திட்ட தலைவா்கள் ஹோமந்த் லோகியா, மணிகண்டன் ரங்கராஜன் ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையினை வழங்கினாா்கள். கடந்த ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழையும் வழங்கினாா்கள்.