துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம்
சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான தொல்லியல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் வரலாற்றுத் துறை சாா்பில் ‘உரக்கச் சொல்வோம் வரலாற்றை உலகிற்கு’ என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரா.இந்திரா கருத்தரங்கை தொடங்கி வைத்தாா். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பிலும், உதவிப் பேராசிரியா் பா.கந்தசாமி பழங்கால மக்கள் வாழ்வியலில் பாறை ஓவியங்கள் என்ற தலைப்பிலும் பேசினா்.
முன்னதாக வரலாற்றுத் துறைத் தலைவா் க.வெண்ணிலா வரவேற்றாா். மாணவி சுகன்யா நன்றி கூறினாா். கருத்தங்க ஏற்பாடுகளை விரிவுரையாளா்கள் குமரமுருகன், சுரேஷ், அஷ்வத்தாமன் ஆகியோா் செய்தனா்.