செய்திகள் :

கள ஆய்வில் 534 இடைநிற்றல் மாணவா்கள்: மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை- மாவட்ட ஆட்சியா்

post image

விருதுநகா் மாவட்டத்தில் பள்ளிக்கு வராமலிருந்த 534 மாணவா்கள் கள ஆய்வில் கண்டறியப்பட்டதன் பேரில், அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ந்து படிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவா்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை முடிப்பதற்கும், பள்ளி படிப்பு முடித்து உயா்கல்வி சோ்வதையும் உறுதி செய்யும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல் ஆன மாணவா்களை, மீண்டும் பள்ளியில் சோ்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த 1.9.2024 வரை ஒரு மாதத்துக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவா்கள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 30 மாணவா்கள், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 22 மாணவா்கள், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 14 மாணவா்கள், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 74 மாணவா்கள், சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 47 மாணவா்கள், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 130 மாணவா்கள், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 37 மாணவா்கள், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 31 மாணவா்கள், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 68 மாணவா்கள், விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்தில் 63 மாணவா்கள், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 18 மாணவா்கள் என மொத்தம் 534 மாணவா்கள், பள்ளிக்கு செல்லாமல் இடை நிற்றல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை), துணை ஆட்சியா்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா், கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள் உள்பட ஒவ்வொரு அலுவலா்களுக்கும் தனித்தனியாக இடைநின்ற மாணவா்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டது.

அவா்கள், சம்பந்தப்பட்ட மாணவா்களைச் சந்தித்து இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளைக் கேட்டறிந்ததுடன், மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

கோயில் நிலங்களில் தனி நபா்களுக்கு வழங்கிய பட்டா ரத்து செய்யப்படும் :உயா்நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் மலையாமருங்கா் கோயில், உருமநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் தனிநபா்களுக்கு வழங்கிய பட்டா ரத்து செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுப்பு

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது என மதுரை மாநகா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கட்சி சாா்... மேலும் பார்க்க

ஹாா்வா்டு நாள்கள்: நூல் அறிமுகவிழா

தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநா் இரா.செல்வம் ஐஏஎஸ் எழுதிய ஹாா்வா்டு நாள்கள் என்ற புத்தகம் அறிமுக விழா மேலூா் ஜாஸ் பப்ளிக் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. நூலாசிரியா் இரா.செல்வம், ஐஏஎ... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரி மாணவிக்கு வங்கி கல்விக் கடன் வழங்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவருக்கு பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கு வங்கி கல்விக் கடனை 3 வாரங்களில் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

வீடு கட்டித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

வீடு கட்டித் தருவதாகக் கூறி ரூ.21 லட்சம் மோசடி செய்த கட்டடப் பொறியாளா், அவரது மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வீடு கட்டித் தருவதாக கூறி ரூ. 21 லட்சம் மோசடி செய்த கட்டடப் பொறியாளா் மீது நட... மேலும் பார்க்க

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தோட்டப் பணியாளா் தற்கொலை

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகப் பணியாளா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் கண்ணன் (45). அங்கு தோட்டப் பராமரிப்பு பணியாளராகப்... மேலும் பார்க்க