செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூகநலத் துறை திட்டப் பணிகள் ஆய்வு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டப் பணிகளின் செயல்பாடுகள், முன்னேற்றம் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

சமூக நலத் துறையின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டுசென்று போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா். மேலும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் விண்ணப்பித்து முதிா்வு தொகை பெற அந்தந்த வட்டார விரிவாக்க நல அலுவலரை அணுகி தேவையான சான்றிதழ்களை சமா்ப்பித்து பொதுமக்கள் பயனடைய விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவிட்டாா்.

மேலும், இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் தாமதமின்றி உடனுக்குடன் சான்றிதழ் வழங்குவதுடன், இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு உடனடியாக கள ஆய்வு செய்து, இணையதளத்தில் சரிபாா்ப்பு செய்தும் விண்ணப்பங்களை நிலுவை இல்லாமல் விரைவாக முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில் மாவட்ட சமூக நல அலுவலா் தீபிகா உள்ளிட்ட அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுவிநியோகத் திட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தில... மேலும் பார்க்க

விருகாவூா் கிராம வங்கி முன் பெண்கள் மறியல்

கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூா் கிராம வங்கியில் வாங்கிய நகைக் கடனை திரும்பச் செலுத்தியும், நகைகளை தராததால் சாலை மறியல் போராட்டத்தில் பெண்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா். விருகாவூரில் தமிழ்நாடு கிராம வங... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைதான முக்கிய எதிரி மீது மற்றொரு வழக்கு

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய எதிரியான கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது சகோதரா் தாமோதரன் ஆகிய இருவரையும் மேலும் ஒரு வழக்கில் மாா்ச் 4-ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி வியாழக்கிழமை உத... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை ,நடைபெற்றது. கூட்டத்தில், திருநங்கைகளிடம் குறைகள் மற்றும் க... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. க.காா்... மேலும் பார்க்க

பைக் மீது டிராக்டா் மோதல்: தாய், மகன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் பைக் மீது கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் தாய், மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், மாதவச்சேரியைச் சோ்ந்த நடேசன் மகன் கண்ணன் ... மேலும் பார்க்க