விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
கழிவுநீா் கால்வாய் சீரமைப்பு பணி: அமைச்சா் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடியில் கழிவுநீா் கால்வாய் சீரமைப்புப் பணியை அமைச்சா் பெ. கீதாஜீவன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி 40ஆவது வாா்டு மறக்குடி தெரு குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் கால்வாயில் அடைப்புகள் ஏற்பட்டு சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும், இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் எனவும் அமைச்சா் பெ. கீதாஜீவனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று, அவா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவுநீா் கால்வாயை சீரமைக்க உத்தரவிட்டாா்.
இப்பணியை அவா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அவருக்கு அப்பகுதியினா் நன்றி தெரிவித்தனா்.
இதில், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், வட்டப் பிரதிநிதி ஜஸ்டின், மாநகர மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளா் பெல்லா, திரேஸ்புரம் பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.