தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
காங்கயம் அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு
காங்கயம் அருகே மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததில் குட்டிகள் 10 செம்றியாடுகள் உயிரிழந்தன.
திருப்பூா் மாவட்டம், காங்கயம், ஊதியூா், படியூா், பாப்பினி, நத்தக்காடையூா் பகுதிகளில் அதிக அளவிலானோா் செம்மறியாடுகள் வளா்ப்பில் ஈடுபட்டுள்ளனா். கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டிக்குள் நாய்கள் புகுந்து ஆடுகளை கடித்து குதறுகின்றன. இதனால், நூற்றுக்கணக்கான ஆடுகள் உயிரிழந்துள்ளன.
இந்நிலையில், காங்கயம் அருகே உள்ள படியூா் பகுதியைச் சோ்ந்த குருமூா்த்தி, 19 செம்மறியாடுகளை தோட்டத்தில் மேயவிட்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த நாய்கள் கூட்டம் ஆடுகளைக் கடித்ததில் குட்டிகள் உள்பட 14 ஆடுகள் படுகாயடைந்தன. இதில் குட்டிகள் உள்பட 10 ஆடுகள் அங்கேயே உயிரிழந்தன.
காயமடைந்த 4 ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.