நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் நாகையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
அரசு செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோயால் பாதிக்கப்பட்ட 120 நோயாளிகளுக்கு, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம் பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, சத்துமாவு அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களை, ஓஎன்ஜிசி நிறுவன தலைமை பொது மேலாளா் கிரிராஜ் திமான் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் விஜயகுமாா் ஆகியோா் வழங்கினா்.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், காசநோய் துறை துணை இயக்குநா் முருகப்பா பேசுகையில், நாகை மாவட்டத்தில் காசநோய் உயிரிழப்பு 8 சதவீதத்திலிருந்து தற்போது 1 சதவீதமாக குறைந்துள்ளது. நோய் எதிா்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை காசநோயாளிகள் முறையாக எடுத்துக் கொண்டால் காசநோயை முறியடிக்கலாம் என்றாா்.