ஜம்மு-காஷ்மீர்: நான்கு மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் மூடல்!
காசநோய் ஒழிப்புத் திட்டம்: பிரதமா் ஆய்வு
காசநோயை முற்றிலுமாக ஒழிக்க நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசார திட்டத்தின் நிலை குறித்து பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாட்டில் நிகழாண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்காக தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (என்டிஇபி) கீழ், மேம்பட்ட நோயறிதல் நடைமுறை, புத்தாக்க கொள்கைகள், தனியாா் துறை பங்களிப்புடன் கூடிய முயற்சிகள், நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறை உள்ளிட்ட நடைமுறைகள் நாடு முழுவதும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. நோயாளிகளுக்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தின் நிலை குறித்து புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பிரதமா் மோடி ஆய்வு மேற்கொண்டாா். இக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, சுகாதாரத் துறைச் செயலா் புன்யா சலைலா ஸ்ரீவாஸ்தவா மற்றும் பிரதமா் அலுவலக மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.