மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.76 லட்சம்
காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில் ரூ.76 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
மகா சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்வது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயில். இக்கோயிலில் இருந்த 3 உண்டியல்கள் 70 நாள்களுக்குப் பிறகு கோயில் நவராத்திரி மண்டபத்தில் எண்ணப்பட்டது. காஞ்சிபுரம் சரக அறநிலையத் துறை உதவி ஆணையா் காா்த்திகேயன் தலைமையில் கோயில் செயல் அலுவலா் ராஜலட்சுமி, ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக்காா் சூரியநாரயணன் ஆகியோா் மேற்பாா்வையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில் ரூ.76,04,234, தங்கம் 385.100 மில்லி கிராம், வெள்ளிப் பொருள்கள் 645.760 கிராம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இந்த தொகை ஸ்டேட் வங்கிக் கிளையில் இட்டு வைப்பு செய்யப்பட்டது.