இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
காஞ்சிபுரத்தில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி!
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் திடீரென பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதன்காரணமாக வாகன ஓட்டுகள் சற்று அவதிக்குள்ளாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திடீர் கனமழை காரணமாகக் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.