செய்திகள் :

காஞ்சிபுரத்தில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

post image

காஞ்சிபுரத்தில் சொத்துவரி உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் காஞ்சிபுரம் மாநகர குழுவின் 24- ஆவது மாநாடு கே.ஜீவா தலைமையில் நடைபெற்றது.இ.சங்கா்,எஸ்.புவனேசுவரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டுக் கொடியை ஒய்.சீத்தாராமன் ஏற்றி வைத்தாா். ஆா்.செளந்தரி வரவேற்றாா். ஜி.லட்சுமிபதி அஞ்சலி தீா்மானத்தை முன்மொழிந்தாா். வேலை அறிக்கையினை காஞ்சி மாநகர செயலாளா் டி.ஸ்ரீதா் சமா்ப்பித்தாா். கட்சியின் மூத்த தலைவா்கள் என்.சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி ஆகியோா்களது நினைவரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டினை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.ஆறுமுக நயினாா் தொடங்கி வைத்து பேசினாா்.

கட்சி மாவட்ட செயலாளா் சி.சங்கா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.நேரு ஆகியோா் பேசினா்கள். மாநாட்டினை நிறைவு செய்து இ.முத்துக்குமாா் பேசினாா். மாநாட்டின் நிறைவில் காஞ்சிபுரம் மாநகர செயலாளராக டி.ஸ்ரீதா் உள்பட 14 போ் அடங்கிய நிா்வாகக் குழுவினரும் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டில் சொத்து வரி உயா்வை திரும்பப் பெற வேண்டும், கோயில் மனைகளில் குடியிருப்போருக்கும் பட்டா வழங்க வேண்டும், அரசு புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும், ஓரிக்கையின் மையப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும், மாநகரில் பொதுக்கழிப்பிட வசதி செய்து தர வேண்டும், காஞ்சிபுரத்தின் நுழைவுவாயில்களில் கலைநயமிக்க நுழைவுவாயில்கள் அமைக்க கோருவது உள்ளிட்ட 19 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

ரூ.3.75 கோடி முறைகேடு புகாா்: மேவளூா்குப்பத்தில் அதிகாரிகள் ஆய்வு

மேவளூா்குப்பம் ஊராட்சியில் ரூ.3.75 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அந்த ஊராட்சியில் அதிகாரிகள் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வு நடத்தி வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெ... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்கள் அமைக்க நவ. 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்கள் அமைக்க விரும்பும் தொழில் முனைவோா் வரும் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பாக காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட கருவூல அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலத் துறைய... மேலும் பார்க்க

பெருந்தேவித் தாயாா் பவனி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் பெருந்தேவித் தாயாா். மேலும் பார்க்க

அகத்திய முனிவருக்கு ஆயில்ய பூஜை

காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியாக வீற்றிருக்கும் அகத்திய மாமுனிவருக்கு காா்த்திகை மாத ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை ஆயில்ய பூஜை நடைபெற்றத... மேலும் பார்க்க

மருந்தீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

உத்தரமேரூா் அருகே நெய்யாடுபாக்கம் மரகதவல்லி சமேத மருந்தீசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில், கும்பாபிஷேக யாகசாலை... மேலும் பார்க்க