காஞ்சிபுரத்தில் நவ. 15-இல் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 15) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 15) காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாமில் தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வினை நடத்த உள்ளனா். எனவே பட்டதாரிகள், பட்டயப்படிப்பு முடித்தவா்கள், ஐடிஐ மற்றும் 10, 12-ஆம் வகுப்பு படித்தவா்கள், பிஎஸ்ஸி மற்றும் டிப்ளமோ நா்சிங் படித்தவா்களில் முன் அனுபவம் பெற்றவா்கள் போன்றவா்களை தோ்வு செய்யவுள்ளனா். எனவே 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
வேலையில்லாத இளைஞா்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.