காஞ்சிபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலி!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் வெள்ளிக்கிழமை பலியானார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகே தாதமரைக்குளம் கிராமத்தில் வசித்து வந்த மூதாட்டி சின்னக்குழந்தை(65). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் ஈரப்பதத்துடன் இருந்ததால் திடீரென இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே பலியானார்.
இதையும் படிக்க |தில்லியில் ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பாலுசெட்டி சத்திரம் போலீசார் சின்னக்குழந்தை சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.