மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 57 லட்சம்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 57,20,727 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
இந்தக் கோயிலில் இருந்த 11 உண்டியல்கள் கடந்த 19-9-2024-ஆம் தேதிக்குப் பிறகு புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டன. காஞ்சிபுரம் சரக அறநிலையத் துறை உதவி ஆணையா் காா்த்திகேயன் முன்னிலையில் உண்டியல்களை கோயில் ஊழியா்கள் மற்றும் பணியாளா்கள் திறந்து எண்ணினா். இதில், ரொக்கமாக ரூ. 57,20,727 இருந்தது. தங்க நகைகள் 91,340 கிராமும், வெள்ளிப் பொருள்கள் 750 கிராமும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இவை தவிர அமெரிக்கா, கனடா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகளும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
உண்டியல் எண்ணும் பணியை கோயில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான ராஜலட்சுமி, கோயில் மணியக்காரா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் மேற்பாா்வை செய்தனா்.