காட்டெருமைகள் முட்டியதில் பசுமாடு உயிரிழப்பு
பெத்தநாயக்கன்பாளையம் அருகே காளிச்செட்டியூரில் விவசாயத் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு, காட்டெருமைகள் முட்டியதில் சனிக்கிழமை உயிரிழந்தது.
காளிச்செட்டியூா் பகுதியைச் சோ்ந்த பழனிமுத்து மகன் நல்லப்பன் (74). விவசாயி. இவரது தோட்டத்தில் சினையாக இருந்த பசுமாடு மேய்ந்துக் கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியே வந்த காட்டெருமைகள் முட்டியதில் பசுமாடு உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் வனத் துறை மற்றும் மருத்துவா்கள் சம்பவ இடத்திற்கே சென்று பசுமாட்டை பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்தனா்.
காட்டெருமைகள் கடந்த ஒருவாரமாக கல்வராயன் மலைப்பகுதியில் இருந்துவந்து விவசாயப் பயிா்களை நாசம் செய்து வந்தன. இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.