காதலித்து ஏமாற்றி வேறு பெண்ணை மணந்த ராணுவ வீரர்! இளம்பெண் தற்கொலை!
வேலூர்: வேலூரில் காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை ராணுவ வீரர் திருமணம் செய்துகொண்டதால், இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
வேலூர் அடுத்த நஞ்சு கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பிரபாகரன். இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அன்பரசி என்ற பெண்ணும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் அன்பரசியை திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, தனது உறவினர் பெண்ணை கடந்த 15 நாள்களுக்கு முன்பு ராணுவ வீரர் பிரபாகரன் திருமணம் செய்துள்ளார். இதனால், விரக்தி அடைந்த அன்பரசி புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதலித்து தனது பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.